நாட்டுக்கு இப்போது தேவைப்படுவது விரைவாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஆகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த நாடு பௌத்தர்களின் நாடு அல்ல என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும், கார்தினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையினால் அமைச்சரின் கூற்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment