கிழக்கு கடற்படையினரால் மூதூர் பாலத்திற்கடியில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இம்மாதம் 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மீன்பிடி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழல் 12 வர்க்க துப்பாக்கியொன்றும், வெடிபொருட்கள் சிலவும் மீட்கப்பட்டன.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மேலும் பல வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் நடவடிக்கையின் போது குழல் துப்பாக்கிகள் மூன்றும், வெடிமருந்து பீப்பாய்கள் இரண்டும், டி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் குண்டுகள் ஐந்தும், கைக்குண்டு ஐந்தும், 7.62 ஒ 39 மில்லி மீற்றர் நீளமான வெடிபொருட்கள் 203 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment