கோலிக்கும் தோனிக்கும் உள்ள வித்தியாசம்

கோலி மற்றும் தோனிக்கு  இடையிலுள்ள  தலைமைத்துவ வித்தியாசம் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரூட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தயராகி வருகிறது. இதில் கப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்ளவுள்ளது. இந்த போட்டி ஜூன் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும்  கூறி வரும் கருத்துகளில் கப்டன் கோலியின் தலைமைத்துவம் தான் முக்கியமான ஒன்றாகவுள்ளது.

தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரூட்ஸ் தலைமைத்துவப் பொறுப்பில் கோலிக்கும், தோனிக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

தோனி எந்த ஒரு சூழலிலும் மனக்கட்டுபாட்டுடன் வீரர்களின் தகுதிகேற்ப யோசித்து நிதானமாக முடிவெடுக்கக் கூடியவர்.  ஆனால் கோலி போட்டியில் மிகவும் ஆக்ரேஷமாக இருப்பார்.  போட்டியில் தனது முத்திரையை அவர் திணிக்க பார்ப்பார் என்று ஜான்டி ரூட்ஸ் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment