சீனாவின் ஷாங்காயில் கட்டிடம் இடிந்துவீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று அந்நாட்டு நேரப்படி 11:30 மணியளவில் பழைய கார் பழுதுபார்க்கும் ஆலையின் கூரை உடைந்து வீழ்ந்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கிய மேலும் 20 பேரில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட இடிபாட்டுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் எனவும் இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த 150 ற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் 24 அவசர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment