அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பொப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் பிரதமர் தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது மனைவி இன்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அவரது மரணத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொருளாதாரம் நவீனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு 1983 முதல் 1991 வரை நாட்டை அவர் வழி நடத்தியிருந்தார்.
மேலும் அவர் அவுஸ்ரேலியாவின் மத்திய-இடது தொழிற்கட்சி சார்பாக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றியிருந்தார்.
1947ஆம் ஆண்டில் தொழிற்கட்சியில் இணைந்த அவர் 1953இல் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு ரோட்ஸ் புலமைப்பரிசிலை வென்றார்.
இதன்பின்னர் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்த அவர் 1969 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய தொழிற்சங்க சபையில் தலைவரானார்.
1980ஆம் ஆண்டு ஒரு தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட அவர் 1983இல் தொழிற்கட்சித் தலைவரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment