உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இங்கிலாந்தில் இன்று கோலாகலமாகத் ஆரம்பிக்கிறது.
இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 12 ஆவது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது.
இன்று முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை 46 நாள்கள் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆபிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியும் மோதவுள்ளன.
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணியின் தலைவர்களுக்கு இங்கிலாந்து அரண்மனையில் விருந்து அளிக்கப்பட்டது. ஒவ்வொரு அணித் தலைவருக்கும் ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி ஆகியோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து அளவளாவினர்.
0 comments:
Post a Comment