மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வயோதிபர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் குறித்து கல்லடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment