கொக் மற்றும் பெப்சிக்கு தடா

கொக்கோலா மற்றும் பெப்சி உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை ஓகஸ்ட்-15  முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  விழுப்புரத்தில் நடந்தது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்குப் போட்டு இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துள்ளார்கள். நாட்டின் பெருமையைக் காப்பாற்றி இருக்கும்  நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை நமது தொழில் உரிமைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெற்று வருபவர்கள் காப்பாற்றுவார்களா? என்றால் நிச்சயமாக காப்பாற்ற மாட்டார்கள். எல்லோரும் வெளிநாட்டுக்குத்தான் துணையாக இருப்பார்கள்.

இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அன்னிய தயாரிப்பு பொருள்களைத் தவிர்த்து நம் நாட்டுத் தயாரிப்புப் பொருள்களைத் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு சுதேசி கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘‘சுதேசி பொருள்களைத்தான் வாங்க வேண்டும்’’ என்ற இருசக்கர வாகனத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் தமிழகம் முழுவதும் இருந்து தொடங்கி திருச்சி மலைக்கோட்டைக்கு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வந்தடைகிறது.

அங்கு ‘சுதேசி பிரகடனம்’ செய்யவிருக்கிறோம். அன்னிய குளிர்பானங்களான கோக்-பெப்சியையும் அதன் இதர தயாரிப்புகளையும் கடைகளில் விற்காமல் புறக்கணிக்க வேண்டும். 

அன்று முதல் அந்நிய பொருள்களின் தயாரிப்புகளைக் கடைகளில் வியாபாரிகள் முன்னிலைப்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் ஏற்படும் அந்நிய மோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நம் நாட்டுத் தயாரிப்பு சுதேசி பொருள்களை தான் கடைகளில் விற்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து சில்லரை வியாபாரிகளும் வணிகர் சங்க பேரவையின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்த முன்வர வேண்டுகிறேன்-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment