துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

@E4Emovies@dop007@sooriaruna@DhruvVikramOffl@BanitaSandhu@Viveka_Lyrics@sureshsrajan Adithya Varma shoot completed See Dhruv rejoice pic.twitter.com/i1CDTmexZZ

— MUKESH RATILAL MEHTA (@e4echennai) May 14, 2019

படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment