அத்தனகல்ல – அலவல வீதி பிரதேசத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரும்பு கம்பி ஒன்றினால் தாக்கியே இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்ட நபர், உயிரிழந்துள்ளவரின் உறவினர் எனவும், சம்பவம் நடைபெறும் போது அவர் மதுபோதையிலிருந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment