பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்க இந்தியாவின் உள்நாட்டு அரசியல் அனுமதிக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து தேர்தல் பிரசாரங்களும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இருந்தமையால் அதனை உடனடியாக சரிசெய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவை காட்டிலும், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாடுகளும் பேசுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
17ஆவது மக்களவை தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. இதனையடுத்து நரேந்திர மோடி இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment