மலேசியாவின் சுமத்திரா தீவில் உள்ள காண்டாமிருகத்தில் ஆண் காண்டாமிருகம் உயிரிழந்துள்ளதால் அந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
போர்னியோ தீவில் வசித்து வந்த அந்த ஆண் காண்டாமிருகம் டாம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இருந்த டாம் நேற்று உயிரிழந்தது. சுமத்ரா தீவின் கடைசி ஆண் காண்டாமிருகத்தின் இழப்பால் அந்த இனம் பூண்டோடு அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த ஆண் காண்டாமிருகத்தின் உயிரணு சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், செயற்கைக் கருவூட்டல் மூலம் அந்த இனத்தை உயிர்ப்பிப்பது சவாலான விஷயம் என்றும் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment