பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. 

* தேர்தலில் மோடியும் அமித்ஷாவும்  மிகப்பெரிய அளவில் பணத்தை  செலவு செய்து உள்ளனர்.

* மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி. 

*  தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள். மோடி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம்.

அரசியல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, என்னுடன் ஏன் விவாதம் நடத்த வில்லை?

* பிரதமர் மோடியின் குடும்பத்தை நான் மதிக்கிறேன்.  எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி கவலைப்படவில்லை.

* கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தினோம்.

* தேர்தல் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவரது செய்தியாளர்கள் சந்திப்பை நான் பாராட்டுகிறேன் என கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment