இலங்கையின் பல்வேற பகுதிகளில் கடும் வெப்ப காலநிலை நாளை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்ளின் சில பிரதேசங்களிலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், உயர்வான வெப்பமான காலநிலை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
இதனால், பணிபுரியும் இடங்களில் அல்லது வெளியில் செல்லும்போது அதிகளவு நீரை அருந்துமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் அவதானமாக இருக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment