நேருக்கு நேர் மோதிய விமானங்கள் ; ஐவர் உயிரிழப்பு

சுற்றுலா விமானங்கள் இரண்டு வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவின் அலாஸ்கா நகருக்கு அருகில் நடந்துள்ளது.

விபத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்தார்கள், ஒருவரைக் காணவில்லை. என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு floatplanes எனப்படும் மிதவை விமானங்களே வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

 இந்த விபத்து ஏற்பட்டதன்  காரணம் எதுவும்  கண்டறியப்படவில்லை என ஃபெடரல் விமானத்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதிக்கொண்ட விமானங்களில் ஒன்றில் 11 பயணிகள் இருந்துள்ளார்கள். அவர்களில் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு விமானத்தில் ஐந்து பயணிகள் இருந்துள்ளார்கள். முதல் விமானத்தில் பயணித்த 11ஆவது நபரும் இரண்டாவது விமானத்தில் பயணித்த அனைவரும்தான் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் என்று நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் Royal Princess என்னும் சுற்றுலா கப்பலின் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 18 ஆம் திகதி அந்த கப்பல் புறப்படுவதாக இருந்தது. விமான விபத்தில் அதன் பயணிகள் உயிரிழந்ததை அடுத்து, திட்டமிட்டபடி அந்த சுற்றுலா கப்பல் புறப்படாது என்று தெரிகிறது.

விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment