பள்ளி பாடம் எழுதும் மகளைக் கண்காணிக்க, தந்தை ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்குப் பயிற்தி அளித்துள்ளார்.
சீனாவின் தென்மேற்கு பகுதியான குய்சோ ((guizhou)) மாகாணத்தில், வசித்து வரும் சூ லியாங் ((Xu Liang )) என்பவர் பான்டன்((Fantuan)) என்று பெயரிட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
தன்னுடைய மகள் பாடங்களை ஒழுங்காகச் செய்யாமல், செல்போனில் நேரம் செலவிடுவதை அறிந்த லியாங், தனது வளர்ப்பு நாயைக் கொண்டு அவளைக் கண்காணிக்க முடிவு செய்தார்.
இதன்படி, மகள் பள்ளி பாடம் எழுதும் போது, அவளது மேசையின் மேல் கால்களை வைத்து நின்றபடி கண்காணிக்க வளர்ப்பு நாய் பான்டனுக்கு பயிற்சியம் வழங்கியுள்ளார்.
சிறுமியை பாடம் எழுதும்போது மட்டுமல்லாமல், பியானோ வாசிக்கும்போது, அவளது கவனம் வேறு எதிலும் செல்லாதபடி பான்டன் ‘ஆசிரியர்’ போல் கண்காணித்து வருகிறதாம்.
0 comments:
Post a Comment