பாராளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்றத்திலுள்ள மொழி பெயர்ப்பாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகலை பொலிஸார் பாராளுமன்றத்துக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக திஸாநாயக்க சகோதர ஊடகமொன்றுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment