வெலிபன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்த சுனாமி கிராமத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீடொன்றிக்குள் பதுங்கு அறையொன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதை இன்று (26) இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் பல்வேறு பாதாள உலக சம்பவங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை அனுபவித்த ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலக்கீழ் பதுங்கு அறைக்கு விசாலமான இடப்பரப்புடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்சிசன் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏதாவது, தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றால், வீட்டிலுள்ள மனைவியும், பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த அறை அமைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வீடு சட்டவிரோதமான ஏதாவது நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதுதவிர, வெலிபன்ன பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கத்தி, போலியான வாகன இலக்கத் தகடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment