ஐஸ் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த இந்த நபர் வத்துப்பிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம் அடிப்படைவாத நடவடிக்கைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார்.
இதனால், அடிப்படைவாதிகள் இந்த நபரை கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பாக நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment