பாடசாலைக்குள் புகுந்த நபரொருவர் ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்த இருவர், ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.
ஆசிரியர் மீண்டும் பாடசாலை நோக்கி தப்பியோடியுள்ளார். விரட்டிச் சென்ற கொள்ளையர்கள் பாடசாலை வாசலில் வைத்து ஆசிரியையை வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை குறி்த்த படசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment