ஈஸ்டர் தாக்குதல் – தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட ஜே.வி.பி. எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் இடம்பெற்றதன் பின்னரே வெளியிடப்பட வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளும் தெரிவுக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் என அனைவரும் தெரிவுக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் இடம்பெற்றதன் பின்னரே வெளியிடப்பட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment