தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகளை முறையாக பராமரிக்காததே காரணம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகள் பராமரிப்பின்மையே காரணம் - ஐகோர்ட் கண்டனம்
மதுரை:
சாலை விபத்தில் கர்ப்பிணி புஷ்பா உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், 1998ல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், 25 ஆண்டுக்கு மேலாகியும் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும்.
விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன என தெரிவித்தார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment