ஓட்டப்பந்தையத்தில் நாய்க்கு வெண்கலப் பதக்கம்


பல்கலைக்கழக ஓட்டப்பந்தையத்தில் வளர்ப்பு நாய் ஒன்று வெண்கலப் பதக்கம் வென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியான நிக்சியா ஹூய் பகுதி தலைநகராக யின்ச்சுவான் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள வடக்கு மன்சூ பல்கலைக்கழக வளாகத்தில் நான்கு ஆண்டுகளாக ஜியாபாய் என்ற வெள்ளை நாய் வசித்து வருகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அப்போது மைதானத்திற்குள் தற்செயலாக நுழைந்த அந்த நாய் போட்டியாளர்களுக்கு இணையாக வேகமாக ஓடியதாம். 

இந்த வீடியோ சீனா வைபோவில் வைரலாகப் பரவியது. வீடியோவின் படி அந்த நாய் மூன்றாவது இடத்தைப் பெற்றது. இதையடுத்து நாய் வெண்கலம் பெறத் தகுதி பெற்றுள்ளதாக அறிவித்தனர்.

ஆனால் வென்ற இந்த நாயின் வெற்றி மேடையில் பாராட்டைப் பெறவில்லை. சில சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நாய்க்கு பாராட்டுவிழா நடத்தி வெண்கல பதக்கத்தை அணிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment