ராகவா லாரன்ஸ் நடிப்பில் அண்மையில் காஞ்சனா 3 படம் நல்ல வரவேற்பை பெற்று அதிகமாக வசூல் சாதனை செய்து லாபத்தை ஈட்டியது. நீண்ட நாட்கள் தியேட்டரில் இப்படம் ஓடியது.
திரில்லர் பேய் கதையாக வந்த இப்படம் ரசிகர்களை மிகவும் கவரும் வண்ணம் அமைந்தது. இதனை தொடர்ந்து லாரன்ஸ் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு வெளியிட்டார்.
காஞ்சனா படத்தை ஹிந்தி ரீமேக் செய்யப்போவதாகவும், அதில் அக்ஷய் குமார் நடிக்க போவதாகவும் கூறினார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
8 வருடங்களுக்கு பிறகு இப்படம் ஹிந்தியில் லக்ஷ்மி பாம் என ரீமேக் ஆக இதில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஜோடி நடிக்க சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம்.
0 comments:
Post a Comment