ஹுவாய் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்க பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அரசு ஹுவாய் ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரகம் ஹுவாய் நிறுவனம் தயாரித்து வரும் தொழில்நுட்ப சாதனங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருவதாக கடந்த சில வருடங்களாக குற்றம் சாட்டி வந்துள்ளது. இதன் பின்னணியாக கூகுள் நிறுவனமும் ஹுவாய் ஸ்மார்ட்போன்களுக்கு தங்களது செயலிகளை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று வருவதால் இந்த வளர்ச்சி நீடித்தால் பாதுகாப்பிற்கு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் கூறியது. இதன் தொடர்ச்சியாக ஹுவாய், அதற்கு பாகங்களை தயாரித்து தரும் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் என அனைவருக்கும் தடை குறித்த நோட்டிஸ் கடந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுப்பப்பட்டது. இந்த தடையின் தொடர்ச்சியாக கூகுளுடன் இணைந்து, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள் தளத்தில் இயங்கி வந்த ஹுவாய் ஸ்மார்ட்போன்களில் இனி கூகுளில் செயலிகளான பிளே ஸ்டோர், யூடியூப், கூகுளின் மேப்ஸ் போன்ற முன்னணி செயலிகளை பார்க்க இயலாமல் போனது.
ஏற்கனவே மக்களிடம் இருக்கும் ஹுவாய் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் கூகுள் செயலிகள் குறித்து எந்தவித மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ஆனால், இது குறித்து பதிலளிக்கவும் ஹுவாய் வாடிக்கையாளர் சேவை மையம் மறுத்து வருகிறது. மக்கள் தற்போது பரவலாக பயன்படுத்தி வரும் ஆண்ட்ராய்ட் மென்பொருள் தளத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறது. இதுபோன்ற கூகுள் செயலிகள் அல்லாத ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு எவ்விதத்தில் இருக்கும் என்பது நிச்சயம் கேள்விக்குறிதான். இதுவரை இல்லாத அளவிற்குபிஹுவாய் ஸ்மார்ட்போன்கள் தொழில்நுட்ப பங்குச் சந்தையில் அதிக வீழ்ச்சி பெற வாய்ப்பு உள்ளதே நிதர்சனம்.
#HuaweiPhone #Technologyissue #Bigproblem #HuaweiBanExplained #Google #Technologynews #Tamilnewsking
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment