எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முத்தரப்பு போட்டியா? இரு தரப்புப் போட்டியா என்பது குறித்து ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் தெரியவரும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்றிரவு அரச தொலைக்காட்சியொன்றின், நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வெற்றி பெற முடியுமா எனவும் அதில் எவ்வகையான போட்டித் தன்மை காணப்படும் எனவும் அமைச்சரிடம் நிகழ்ச்சியை நடாத்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தான் ஜனாதிபதியுடன் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியா செல்லவுள்ளேன். இந்தியா சென்று முடிவதற்குள்ள இடைவெளியில் விமானத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இது குறித்து கேட்டு அறிந்து கொள்ளவுள்ளேன் எனவும் அமைச்சர் கூறினார்.
0 comments:
Post a Comment