தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாங்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட மொஹமட் அலியார் என்பவரை காத்தான்குடியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment