கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவத்தில் கைது செய்த அவரை பிணையில் விடுதலை செய்தமை கவலையளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாலக சில்வாவின் கைதினால் சஹரான் காசீம் மீதான விசாரணைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கருத முடிகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு நாமல் குமாரவின் வாக்குமூலத்தை வைத்து நம்பகமான ஆதாரங்கள் இன்றி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நலக டி சில்வாவை கைது செய்தமை, அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சதியாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment