இராமரின் முடிசூட்டு விழாவும் வியாழக்கிழமை அன்றுதான் நடைபெற்றது என்றும் விரைவில் இராமர் கோயில் கட்டப்படும் என்றும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.
அத்துடன் கடவுள் இராமரின் சிந்தனைகளைக் கொண்ட கட்சி மத்தியில் அதிகாரத்திற்கு வந்துவிட்டது என்றும், இராமரின் ஆசியோடு தேசத்தில் இராம இராஜ்யம் உருவாக்கப்படும் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், அவரின் பதவியேற்பு விழாவையும் இராமரின் பதவியேற்பு விழாவையும் ஒப்பிட்டு சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில், இராமர் கோயிலை கட்டி முடிப்பது என்பது சிறந்த தேசத்தை உருவாக்குவது போன்றது. இராமரின் வெற்றி ஊர்வலத்தை யாராலும் தடுக்க முடியாது.
உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடுதான் இராமர் கோயில் எழுப்பப்படும் எனும் பிரதமர் மோடியின் கூற்றை நாங்கள் ஏற்கிறோம். நீதிமன்றமும் மக்களின் எண்ணத்தை கருத்திற் கொண்டு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment