மின் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் பா.ஜ.கவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்குள்ள உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மிக்சி, சலவை இயந்திரம் ஆகியவற்றை உடைத்து, அவர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மின் கட்டண உயர்வால் வணிகர்கள், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளதால், மின் கட்டண உயர்வை எவ்வித நிபந்தனையுமின்றி அரசு திரும்பப் பெறவேண்டும் என்று அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.
0 comments:
Post a Comment