வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை நோன்பு பெருநாள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான நோன்பு பெருநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக ஒன்றிணைந்திருந்தனர்.
சர்வமதத்தலைவர்களின் ஆசியுரை மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல் , நோன்பு திறத்தல் என பல்வேறு விடயங்கள் நிகழ்வில் இடம்பெற்றிருந்தன.
இதில் வன்னிப் பிராந்திய இராணுவத்தினர் , கடற்படையினர் , பொலிஸார் , தமிழ் சிங்கள முஸ்ஸிம் பொதுமக்கள் , வர்த்தக சங்கத்தினர் , வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment