ரமலான் நோன்பை முன்னிட்டு லிபியா தலைநகர் திரிபோலியில் சண்டை நிறுத்தம் செய்ய அரசுப் படையினருக்கும், போராட்டக் குழுவினருக்கும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று லிபியா. இந்நாட்டின் சர்வாதிகாரி கடாபி, 2011 ல் கொல்லப்பட்டதிலிருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இவர்கள், அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இச்சண்டையில் இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் பரிமாறிக்கொள்ள உதவி செய்யவும் ஐ.நா., முன் வந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இவர்கள், அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இச்சண்டையில் இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் பரிமாறிக்கொள்ள உதவி செய்யவும் ஐ.நா., முன் வந்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment