ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்கவிருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கவிருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் வருடாந்திர விளம்பரக் கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.
0 comments:
Post a Comment