ஆட்சியாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை!

பயங்கரவாதத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் எவரேனும் தடையாக இருந்தால் அவர்களை நீக்கிவிட்டு புதிய பயணத்தை ஆரம்பிப்போம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற “தேசத்திற்கான வழி” மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் எவரேனும் தடையாக இருந்தாலோ அல்லது பொறுப்பில்லாது செயற்பட்டாலோ அவர்களை நீக்கிவிட்டு புதிய பயணத்தை ஆரம்பிப்போம்.
சகல கட்சிகளில் உள்ள மிகச்சரியான நபர்கள் ஒன்றிணைந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்களால் சுயாதீனமாக ஒருவரை தெரிவுசெய்யும் சூழலை உருவகிக்கொடுக்க வேண்டும்.
அன்று 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி ஜே.வி.பி கலவரம் உருவாகிய போது நான் முதலில் ஊரடங்கு சட்டம் குறித்து அறிந்துகொண்டேன்.
இன்றும் அதே நிலைமையை என்னால் அவதானிக்க முடிகின்றது. இன்றும் ஐம்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம், சண்டை, அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் என்பன இருந்துகொண்டுதான் உள்ளது.
இவை இல்லாத ஒரு நாடு என்று உருவாக்கப்போவது என்ற கேள்வி இன்றும் எம்மத்தியில் உள்ளது“ என தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment