நோயாளி ஒருவரின் வயிற்றுக்குள் கரண்டி, கத்தி, ஸ்குரூ டிரைவர், டூத் பிரஷ் என அனைத்தும் இருந்தமை சத்திரசிகிச்சையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் இமாசலப்பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மாண்டி பகுதியில் வசிக்கும் ஒருவர், தனக்கு கடுமையான வயிறு வலி எனக் கூறி அரசு மருத்துவமனையில் தங்கியுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் விசாரிக்கையில், அவர் ஏதும் சொல்லவில்லை.
குறித்த நபர் தொடர்ந்து வலியால் துடிக்கவே, மருத்துவர்கள் உடனடியாக அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். ஸ்கேனிங் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
நோயாளியின் வயிற்றில் இருந்தது 8 கரண்டி, 2 ஸ்குரூ டிரைவர், 2 டூத் பிரஷ், ஒரு கத்தி. இது குறித்து அந்த நோயாளியிடம் கேட்டதற்கு , அவர் எதுவும் சொல்ல தெரியாமல் திருதிருவென விழித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் நிகில் கூறுகையில், ‘வயிற்றுக்குள் இந்த பொருள்களைக் கண்டதும் எங்கள் மருத்துவக்குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். பொதுவாக மனிதர்கள் கரண்டி, கத்தி போன்றவற்றை விழுங்க மாட்டார்கள். நோயாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இப்படி செய்துவிட்டார்’-என்றார்.
0 comments:
Post a Comment