அவிசாவளைப் பகுதியில் பொற்றோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் போன்றன இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
அவிசாவளை கொட்டியாகும்புரப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே பெற்றோல் குண்டுகளும், வாள்களும் மீட்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் அவிசாவளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment