அட..! இவைகளுக்கும் சர்வதேச தினமா

சர்வதேச ஆமைகள் தினத்தை முன்னிட்டு, ஆமைகளுக்காய்  விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஆமை இனங்களை பாதுகாப்பது தொடர்பிலான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரு நாட்டிலுள்ள உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது.


அங்கு 40க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

அவற்றுள் அழிவின் விளிம்பிலுள்ள மஞ்சள் நிற பாதம் கொண்ட ஆமைகள், கலப்பாகோஸ் ((Galapagos)) தீவிலிருந்து கொண்டு வரப்பட்ட 150 வயதான சான்சோன் ((Sanson))ஆமை ஆகியவையும் அடங்கும்.


இங்குள்ள ஆமைகளில் பெரும்பாலானவை செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டவைகளாகும். 

இந்த நிலையில் சர்வதேச ஆமைகள் தினத்தை முன்னிட்டு, உயிரியல் பூங்காவிற்கு வந்த பள்ளி மாணவர்கள் ஆமைகளுக்கு மலர்கொத்துகளை அளித்தனர். அதனை ஆமைகள் உண்டதையும் மாணவர்கள் கண்டு களித்தனர்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment