ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சினையால் சுமார் ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படுவதற்கு முழு காரணம் தமிழக அரசுதான். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் மாயவன்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தமிழக அரசின் உதவி பெறும் உயர்நிலை மேல் நிலைப்பள்ளிகளின் ஆயிரத்து, 500 ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பும் வேலையில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது.
வருடத்திற்கு இரு தேர்வுகள் நடத்த வேண்டும் என்றான போதும், காலதாமதமாகத் தேர்வு நடத்தியதோடு. 2013 க்கு பின்னர் 4 வருடங்களும், 2017 இல் இருந்து இதுவரையும் டெட் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
16 தேர்வுகள் நடத்த வேண்டிய இடத்தில் இதுவரை 4 தேர்வுகளே தமிழக அரசு நடத்தியுள்ளது. தவறுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்துவிட்டு ஆசிரியர்களை குற்றம் சாட்டி வருகிறது.
தகுதி நீக்கம் என்பது ஆசிரியர்களை தற்கொலைக்குத் தூண்டும் விதமாக உள்ளது என்றார்.
23.8.2010 இல் இருந்து 16.11.2012 உள் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். அரசின் செயல்பாட்டை பொறுத்து அடுத்த கட்டமாக 7 ஆம் திகதி ஜேக்டோ ஜியோ கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவு செய்ய இருக்கிறோம். என்றார்.
0 comments:
Post a Comment