இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டம் எனவும், அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த நாட்டிலுள்ள விகாரையாக இருக்கலாம், முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம், கிறிஸ்தவ ஆலயமாக இருக்கலாம், எதனையும் பாதுகாப்புப் பிரிவுக்கு எந்த நேரத்திலும் சென்று சோதனையிட முடியும். இதற்கு தனியான சட்டங்களை கொண்டு வர முடியாது.
சிங்கள இன மக்களைக் கோப மூட்டக் கூடியவாறு அறிவிப்புக்களை விடுக்க வேண்டாம் என அசாத் சாலி ஆளுநரிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மினுவாங்கொட வன்முறைச் சம்பவம் குறித்து அசாத் சாலி விடுத்த அறிவித்தலின் மூலம், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்.
ஆளுநர் அசாத் சாலி இனவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க இன்று ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment