கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய செயற்படாமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாந்து மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரி ஜே.ரி.டீ. ஜயசிங்கவின் தலைமையிலான குழுவினால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணை சட்ட மா அதிபர் தப்புலத டி லிவேராவின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படுகின்றது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு ஏற்ப, இவர்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment