இலங்கையிலுள்ள இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால், இணையத்தளங்களை அவதானமாக வைத்திருக்குமாறும் இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவு கேட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 10 இணையத்தளங்கள் மீது நேற்று (19) அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் உட்பட சில இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் காரணமாக நேற்று அதிகாலை முதல் இப் பத்து இணையத்தளங்களும் முடங்கியதுடன் சில மணித்தியாலங்கள் இவை செயலிழந்துள்ளன.
இருப்பினும், சைபர் தாக்குதலுக்குள்ளான அனைத்து இணையத்தளங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவந்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவின் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment