இளவரசர் ஹரியின் குழந்தையை கேலி செய்த படைப்பாளர் பணி நீக்கம்!

அரச குடும்பத்தின் புதிய வரவான இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்கு பிறந்த ஆண்கு ழந்தையை கேலி செய்த BBC பத்திரிகை படைப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மே மாதம் ஆறாம் தேதி பிறந்த இந்த குழந்தை இங்கிலாந்து அரச அரியணைக்கான வரிசையில் ஏழாவது இடத்தை வகிக்கிறது.
இந்த நிலையில், பிரிட்டிஷ் அரசக் குழந்தை மருத்துவமனையில் இருந்து வெளி வந்துள்ளது எனும் தகவலுடன் குரங்கைக் காட்டும் படத்தை பதிவேற்றம் செய்த BBC படைப்பாளர் டேனி பேக்கர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளவரசர் ஹேரியின் மனைவி மேகன், கலப்பினத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தை ஆர்ச்சியும் கலப்பினத்தை சேர்ந்துள்ளது.
ஆகையால் BBC படைப்பாளர் பேக்கர், Twitter இல் செய்திருந்த பதிவை இனவாதக் கருத்தாக கருதுவதாகப் பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும், அந்தப் பதிவு நகைச்சுவை நோக்கம் கொண்டது என பேக்கர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்த பதிவை அகற்றியுள்ளதுடன் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment