உணவகம் ஒன்றின் சமயலறையில் ஊழியர் ஒருவர் குளிக்கும் காணொளி ஒன்று வைரலாகிய நிலையில், அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நடந்துள்ளது.
வெண்டேஸ்(wendeys) பாஸ்ட்புட் உணவகம் ஒன்றில், வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர், அண்மையில் சமயலறையின் பாத்திரம் கழுவும் தொட்டியில் சோப்பு நீரை நிரப்பி, உற்சாகக் குளியல் போட்டுள்ளார்.
இவரது செயலை சக ஊழியர்கள் கிண்டலடித்து சிரிக்கும் காணொளி அண்மையில் வலைதளங்களில் வைரலானது. இதனைப் பகிர்ந்த பலரும், ஊழியரின் செயல் அருவருப்பாக உள்ளதாகக் கூறியதோடு, கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உணவக உரிமையாளர், உணவகத்தின் நன்மதிப்பை கெடுத்ததாக ஊழியரை பணியிலிருந்து நீக்கினார்.
0 comments:
Post a Comment