'பாய்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.
அதில் 'நூவொஸ்தாவன்டே நேநொத்தன்டானா, பொம்மரிலு,' உள்ளிட்ட சில படங்கள் அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தன.
2013 இல் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஜபர்தஸ்த்' படத்தின்போது, ஊடகத்தைப் பற்றி அவர் தவறாகப் பேசியதால் ஏற்பட்ட பிரச்சினையில் ஊடகங்கள் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தன.
அந்த சர்ச்சையிலிருந்து சித்தார்த் முழுமையாக மீளவில்லை. அதனால், அவரைத் தயாரிப்பாளர்களும் புறக்கணித்தார்கள்.
இந்த நிலையில் தற்போது, திடீரென தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு உறுதியைத் தந்துள்ளார் சித்தார்த்.
“மீண்டும் தெலுங்கு ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒரு முயற்சியில் இருக்கிறேன். 18 மாதங்கள் நேரம் தாருங்கள். உங்களை கட்டாயம் ஏமாற்ற மாட்டேன். கடின உழைப்பும், ஒரு அற்புதமான கதையும் வந்து கொண்டிருக்கிறது,” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment