பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய் ஒருவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
சீதாராம் குஜ்ஜர் - தீபிகா குஜ்ஜர் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இரவு தீபிகா தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதன்போது திடீரென எழுந்த அவர் நள்ளிரவில் தன் மகனை தூக்கிக் கொண்டு தண்ணீர் தொட்டியில் வீசி மூழ்கடித்தார். என்று கூறப்படுகிறது.
பிறகு மீண்டும் படுத்து உறங்கினார், பின்னர் இரவு 1.30 மணிக்கு குறித்த பெண்ணின் கணவர் சீதாராம் எழுந்து குழந்தையைத் தேடியுள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் காணாமல் போன சிறுவனைத் தேடிய நிலையில் அவர்களுடன் இணைந்து தீபிகாவும் மகனைத் தேடினார்.
இறுதியில், சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் கிடப்பதை தீபிகாவின் மாமியார் கண்டு பிடித்தார். இதை அறிந்ததும் அனைவரும் அழவே, அவர்களுடன் தீபிகாவும் அழுதுள்ளார்
இது தொடர்பாக பொலிஸார் குழந்தையின் குடும்பத்தாரிடம் விசாரணை செய்த நிலையில் தீபிகா மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்ட தீபிகா, தூக்கத்தில் தனக்கே தெரியாமல் இப்படிச் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையில் தீபிகாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து பின்னர் உடல்நலக் கோளாறால் இறந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment