தனி நபர் ஒருவரை மட்டுமே நம்பி ஓர் அணி இயங்கக்கூடாது. இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்ததாவது,
திறமை மிக்க சில வீரர்கள் அணியில் இருந்தாலும், ஓர் அணியாக இணைந்து மற்ற வீரர்களும் அளிக்கும் பங்களிப்பில்தான் வெற்றியானது சாத்தியமாகிறது எனத் தெரிவித்தார்.
ஒருவர் அளிக்கும் சிறப்பான பங்களிப்பால் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரையே வென்றுவிடலாம் எனக் கருதக்கூடாது -என்றார்.
0 comments:
Post a Comment