உச்ச நீதிமன்றின் புதிய நீதிபதிகளாக நால்வர் இன்றையதினம் பதவியேற்றுள்ளனர்.
அனிருதா போஸ், போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய், சூர்யகாந்த் ஆகியோரே பதவியேற்றனர்.
உச்ச நீதிமன்றில், வெற்றிடமாகவிருந்த 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார்.
இந்த நிலையில், புதிய நீதிபதிகள் நால்வரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் முன்னர் 27 பேராக இருந்த உச்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 31 பேராக உயர்ந்துள்ளது.
0 comments:
Post a Comment