புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியே பொறுப்பேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திலேயே மக்களவையின் முதல் கூட்டத்தொடர் எப்போது என்று தீர்மானிக்கப்படுவது வழமையாகும்.
இந்நிலையிலேயே எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment