வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தின்போது, தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் இருக்கும் வணிக வளாகத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரக் கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், கோச்சிங் வகுப்பில் இருந்த மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூன்று மற்றும் நான்கவது தளத்திலிருந்து குதித்த போது சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தன
இந்த நிலையில் தீ விபத்தைக் கண்ட அங்கிருந்த இளைஞர், உடனடியாக அருகில் இருந்த ஏணியைப் பயன்படுத்தி அங்கிருந்த 20 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
”நான் அங்கு புகை வருதைக் கண்டேன், என்ன நடக்கிறது எனக்குப் புரியவில்லை, இருப்பினும் முதலில் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை வெளியேற்றினேன். அடுத்த 40 முதல் 45 நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டனர்” என்றார்.
0 comments:
Post a Comment