கிழக்கு மாகாணத்தில் நியாயமானதோர் ஆளுனரை நியமிக்க வேண்டும் எனக்கோரி கிழக்கு மாகாணம் தழுவியதாக அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தால் கடையடிப்பினால் திருகோணமலை முற்றாக முடங்கியது.
திருகோணமலை பொதுச்சந்தை வியாபாரநிலையங்கள் தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்து.
மேலும் தனியார் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.
பாடசாலைகள் அரச அலுவலக திறந்திருந்தபோதும் சிறு அளவிலானவர்களே சமூகமளித்திருந்தமையால் அவர்களும் திரும்பி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
எனவே மாவட்டத்தில் உள்ள சகல இன மக்களும் தமது கடமைகளை நிறுத்தி இந்த கடையடைப்பு ஹர்தாளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.
0 comments:
Post a Comment